×

பெங்களூரு விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்

பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தனியார் சொகுசு விமானம் தரையிறக்கப்பட்டது. பெரும் விபத்தை தவிர்க்க ஓடுதளத்தில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், விமானத்தின் முன்பக்கம் மட்டும் சேதமானது.

Fly by Wire Premiere 1A விமானம் ஒன்று அதன் லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுபாதையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வழியே சென்ற விமானம் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது போல தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர் எனவும் பயணிகள் யாரும் இல்லை எனவும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post பெங்களூரு விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தரையிறக்கப்பட்ட தனியார் விமானம் appeared first on Dinakaran.

Tags : Bangalore airport ,Bengaluru ,Bengaluru H. PA ,El Airport ,Bengaluru airport ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...